“Agony and Solace”-Conference-2011

PFHRGD                   மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின்அமைப்பு 

இலங்கையில் வாழும் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ரீதியான பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றார்கள்.அவர்களது உயிர், உடைமைகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை நீடித்து வருகிறது.இந்த நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வுகள் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

எனவே இது தொடர்பாக வருகின்ற ஆகஸ்டு மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் “துயரும்+தீர்வும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் புது தில்லியில் உள்ள Constitution Club of India-வில் நடைபெறுகின்றது. இதில் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளும் அதன் தலைவர்களும் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அமைய முயற்சி மேற்கொள்ள உள்ளோம். ஆகவே தாங்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்க தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து நிரந்தரமான் தீர்வு அமையக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்தக் கருத்தரங்கமானது இலங்கைத் தமிழர் தலைவர்களின் ஒன்றுபட்ட தீர்வாக அமைய வேண்டும் என்று வாழ்த்தி வரவேற்கின்றோம்.

 நன்றி!

நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி முடிய.
தேதி: ஆகஸ்டு மாதம் 23 மற்றும் 24ம் தேதிகள்
இடம்: Constitution Club of India,
Vithal Bahi Patel House, Rafi Marg,
New Delhi – 110 001.

இப்படிக்கு,
டாக்டர்.ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் M P
தலைவர்
PFHRGD

அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளின் விபரம்
(01)இலங்கை தமிழ் அரசு கட்சி
தலைவர்: இராஜவதோயம் சம்பந்தன் அவ்ர்கள்
செயலாளர்:ளு.சேனாதி ராஜா அவர்கள்

(02)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
செயலாளர்:பு.பு.பொன்னம்பலம் அவர்கள்,

(03) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்)
செயலாளர்:ஈ.பிரேமச் சந்திரன்அவர்கள்,

(04) பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்)
தலைவர்: இரா.துணை ரத்தினம் அவ்ர்கள்
செயலாளர்:வு.சிறீதரன் அவர்கள்,

(05) தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்)
தலைவர்: தர்மலிங்கம் சித்தார்த்தன் அவ்ர்கள்
செயலாளர்:ளு.சதானந்தன் அவ்ர்கள்

(06) தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலொ)
தலைவர்: செல்வம் அடைக்கல நாதன் அவர்கள்
செயலாளர்: ஹென்றி மகேந்திரன் அவர்கள்

(07) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)
தலைவர்: சிவநேசதுரை சந்திர காந்தன் அவர்கள்
செயலாளர்: யு.வு.கைலேஸ்வர ராசா அவர்கள்

(08) தமிழர் விடுதலைக் கூட்டணி
தலைவர்: வீரசிங்கம் ஆனந்த சங்கரி
செயலாளர்: மு.மு.கனக ராசா அவர்கள்

(09) தமிழர் விடுதலைக் கூட்டணி
தலைவர்: வீரசிங்கம் ஆனந்த சங்கரி
செயலாளர்: மு.மு.கனக ராசா அவர்கள்

(10) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முண்ணனி,(ஈ.என்.டி.எல்.எஃப்)
(மாநாடு ஏற்பாட்டாளர்கள்)